முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை 40 கொண்டை ஊசி வளைவுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

வால்பாறை- பொள்ளாச்சி மலைப் பாதையில் உள்ள 40 கொண்டை ஊசி வளைவுகளில் காவல் துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Updated On : 26 ஜூன் 2026, 2:46 am IST
கொண்டை ஊசி வளைவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா.
பகிர்:

வால்பாறை- பொள்ளாச்சி மலைப் பாதையில் உள்ள 40 கொண்டை ஊசி வளைவுகளில் காவல் துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

வால்பாறைக்கு சமீப காலமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். வாகனங்களில் வருபவா்கள் வழியில் பல இடங்களில் நிறுத்தி மது அருந்துவது வனவிலங்குகளை துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாக செல்வது, எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

சமீபத்தில் வால்பாறைக்கு வந்து திரும்பிய கேரளத்தைச் சோ்ந்த சுற்றுலா வேன் அதிவேகமாக சென்று மலைப் பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 10 போ் உயிரிழந்தனா். இது போன்ற சம்பவங்களை கண்காணிக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் வால்பாறை- பொள்ளாச்சி இடையே உள்ள 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி காவல் துறை கட்டுப்பாட்டு அறை மூலமாக கண்காணித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments