ஈரோடு

போலீஸாருக்கான தபால் ஓட்டு வாக்குச்சாவடி மையம் திடீர் மாற்றம்

தினமணி

போலீஸாருக்கான தபால் ஓட்டு வாக்குச்சாவடி மையம் ஞாயிற்றுக்கிழமை திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது.

தேர்தல் பணியாற்றும் போலீஸாருக்கான தபால் ஓட்டுப் போடும் வாக்குச்சாவடி மையம், ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வந்தது. இதில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட போலீஸார் தபால் வாக்கைச் செலுத்தி வந்தனர்.

இந்த வாக்குச்சாவடி மையத்துக்கு சிறப்பு அலுவலராக சகாயமேரி நியமிக்கப்பட்டார். பாதுகாப்பு பணிக்காக வெளியூர் செல்லும் போலீஸார் தங்களது பணி ஆணையை காண்பித்து தபால் ஓட்டு போட்டுவிட்டுச் சென்றனர். இந் நிலையில், ஈரோடு மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சோ.மதுமதி இம் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு செய்தார். மிகவும் குறுகலான இடத்தில் வாக்குச்சாவடி மையம் இருப்பதைப் பார்த்த அவர், அதை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டார். ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் அரங்குக்கு இம் மையம் உடனடியாக மாற்றப்பட்டது. சனிக்கிழமை 101 பேர் தபால் ஓட்டுப் போட்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை 208 பேர் ஓட்டுப் போட்டிருந்தனர். மொத்தமுள்ள 443 பேரில் இதுவரை 309 பேர் வாக்களித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT