ஈரோடு

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

DIN

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது.
 தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்ததும் மே 12-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.
 பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்படுவதால் அவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
 அதன்படி, இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அனைத்துப் பள்ளிகளிலும் விநியோகம் செய்யும் பணி புதன்கிழமை தொடங்கியது.
 பள்ளிகளில் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக சான்றிதழில் பள்ளியின் சீல், தலைமை ஆசிரியரின் கையொப்பம் இடப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT