ஈரோடு

கொத்தடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலை அளிக்கக் கோரி முதியவர் மனு

DIN

கொத்தடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறும் வகையில்  தற்கொலை செய்து கொள்ளப் போவதாக முதியவர் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
 இதுகுறித்து, ஈரோடு பி.பி.அக்ரஹாரம், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த முதியவர் பெரியசாமி (64), தனது மனைவி வெள்ளையம்மாள் (50) உள்ளிட்டோருடன்  வந்து ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் மனு அளித்த பிறகு அவர் கூறியதாவது:
 நானும், எனது குடும்பத்தினரும் ஈரோடு, அவல்பூந்துறையைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் கரும்பு ஆலையில் கடந்த 20 ஆண்டுகளாக கூலி வேலை பார்த்து வருகிறோம். அங்கு, எங்களை கொத்தடிமையாக நடத்துகின்றனர். இதுகுறித்து இரண்டு முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, எங்களை தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும்.
 மேலும், இதுபோன்ற புகாரைக் கொடுத்ததால் ஆலை நிர்வாகிகள் அடித்து துன்புறுத்துகின்றனர். ஆலை வளாகத்தில் நாங்கள் வசித்த வீட்டுக்குச் செல்ல அனுமதிக்காததுடன், அங்குள்ள எங்களது பொருள்களையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.
 கடந்த 20 ஆண்டுகளாக கரும்பாலையில் அடுப்பு எரிக்கும் தொழிலை செய்து வந்தோம். தற்போது  வயது முதிர்ந்த நிலையில் வேறு வேலைக்குச் 
செல்ல முடியவில்லை. எனவே, எங்களது வாழ்வாதாரத்துக்காக ஆலை நிர்வாகத்திடமிருந்து இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். மேலும், எங்களது வீட்டில் உள்ள பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றார்.  இதுகுறித்து விசாரித்து போலீஸாரும், வருவாய்த் துறையினரும் அறிக்கை அளிக்க வேண்டும் என ஆட்சியர்  பிரபாகர் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT