செவித்திறன் குறையுடையோருக்கு அரசுப் பள்ளியில் பணி வாய்ப்பு
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பின்வரும் பணியிடங்களுக்கு
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பின்வரும் பணியிடங்களுக்கு ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
ஈரோட்டில் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர், 3 ஆயா பணி ஆகிய பணியிடங்களுக்கு காலமுறை ஊதியத்தில் தாற்காலிகமாக பணியமர்த்தப்பட உள்ளனர்.
அதில், அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 1.7.2018-அன்று 18 வயதுக்கு குறையாத 35 வயதுக்கு மிகாத ஆதி திராவிடர் இனத்தவரும், ஆயா பணியிடத்துக்கு எழுதப் படிக்கத் தெரிந்த மேற்காணும் வயது தகுதியுடன், தாழ்த்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி, ஆர்.என்.புதூர், ஈரோடு-638-005 என்ற முகவரிக்கு ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது
அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.