ஈரோடு

திருப்பூர் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி: எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார்

DIN

திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு-2 சார்பில் திருப்பூர் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியை சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணேசேகரன் துவக்கி வைத்தார்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு-2 சார்பில் ஆகஸ்ட் 1 முதல் கல்லூரி வளாகம், கருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலைய நிர்வாகத்துடன் இணைந்து சனிக்கிழமை காலை தூய்மை பணியை மேற்கொண்டனர்.
நாட்டு நலப் பணித்திட்டம் அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் ஒருங்கிணைத்தார். கல்லூரி முதல்வர் இராமையா தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் தூய்மை பணியைத் துவக்கி வைத்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு துணிப்பைகளை வழங்கினார். நிலைய மேலாளர் சுனில் தத், துணை மேலாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் பர்வேஸ் ஆலம், முன்னாள் ரயில்வே பணியாளரின் குழு உறுப்பினர் சுரேஷ், ஆர்பிஎப் அலுவலர் ராஜரத்தினம், சமூக ஆர்வலர் பொன்மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT