ஈரோடு

போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: நாம் தமிழர் கட்சியினர் காவல் துறையிடம் மனு

DIN

நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்துக்குத் தொடர்ந்து அனுமதி மறுப்பது தொடர்பாக, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான சீதாலட்சுமி, கட்சி நிர்வாகிகள் அளித்துள்ள மனு:நாம் தமிழர் கட்சி சார்பில் மக்கள் பிரச்னைகளுக்காக ஜனநாயக ரீதியாக பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறோம். ஆனால், ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து எவ்விதப் போராட்டத்துக்கும் போலீஸார் அனுமதி அளிக்காமல் மறுத்து வருகின்றனர். அதே நேரத்தில் மற்ற அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், நாம் தமிழர் கட்சியின் ஜனநாயக ரீதியான உரிமை பறிக்கப்படுகிறது.    எனவே, இனிவரும் காலங்களில் மாவட்டத்தில் நாங்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT