ஈரோடு

சிறுவலூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்

DIN

கோபியை அடுத்துள்ள சிறுவலூர் கிராமத்தில்  மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா தலைமை வகித்தார். அவர்,பல்வேறு துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.   வேளாண்மைத் துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த கருத்துக் காட்சியை பார்வையிட்டு ஆய்வகத்தில் ஒட்டுண்ணிப்  பூச்சிகள் உற்பத்தி செய்யப்படும் முறைகள் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.  பின்னர் வேளாண்மை நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சமூகநலத் துறை, உள்ளாட்சித் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, மக்கள் நலத்துறை, ஆதி திராவிடர் நலத் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் முகாமில் கலந்து கொண்டு செயலாக்கம் செய்யப்படும் திட்டங்கள் குறித்து பேசினர்.
முகாமில், கோபி கோட்டாட்சியர் எஸ்.கோவிந்தராஜன், வட்டாட்சியர் எஸ்.பூபதி, கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி, தோட்டக் கலை அலுவலர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை சிறுவலூர் உள்வட்ட ஆய்வாளர் கெளதமி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT