ஈரோடு

சென்னிமலை முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

DIN


சென்னிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா செவ்வாய்க்கிழமை இரவு (நவம்பர் 13) நடைபெறுகிறது.
இக்கோயிலில், கந்த சஷ்டி விழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, தினசரி காலை 9.30 மணிக்கு யாக சாலை பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி, மகா பூர்ணாஹுதி, உற்சவர், மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனை உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. பக்தர்கள் விரதம் இருந்து வழிபாட்டில் கலந்துகொண்டனர். கந்த சஷ்டி விழாக் குழு சார்பில் அன்னதானமும் நடைபெற்று வந்தது. விழா நாள்களில் பக்தர்களின் வசதிக்காக பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.
கந்த சஷ்டியின் நிறைவு நாள் விழா செவ்வாய்க்கிழமை (நவம்பர் 13) நடைபெறுகிறது. விழாவையொட்டி, மாலை 4 மணிக்கு மேல் மலைக் கோயிலில் இருந்து சுவாமிகள் படிக்கட்டுகள் வழியாக அடிவாரத்துக்கு அழைத்து வரப்படுவார்கள். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் சூரர்களை வதம் செய்ய புறப்படுவார்.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT