ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து

DIN

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் வேன் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து பிஸ்கட் பாரம் ஏற்றிக் கொண்டு பெருந்துறை நோக்கி வேன் ஒன்று திம்பம் மலைப் பாதை வழியாக திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. வேனை பாபனாசத்தைச் சேர்ந்த திருமுருகன் (43) என்பவர் ஓட்டி வந்துள்ளார். திம்பம் மலைப் பாதையின் 27 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வேன் 26 ஆவது மலைப் பாதையில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயத்தோடு உயிர்தப்பினார். இந்த விபத்தால் மலைப் பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT