ஈரோடு

வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து தொழிலாளர்களுக்கு செயல் விளக்கம்

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பின்னலாடை  நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வாக்குப் பதிவு

DIN

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பின்னலாடை  நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வாக்குப் பதிவு  இயந்திரம், ஒப்புகை சீட்டு இயந்திரம் குறித்து வருவாய்த் துறையினர் செயல்விளக்கம் அளித்தனர். 
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோயில் பகுதியில் உள்ள பின்னலாடை  நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  வாக்குப் பதிவு  இயந்திரம் செயல்படும் முறைகள், எப்படி  வாக்களிப்பது, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் இயந்திரத்தின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து தொழிலாளர்களுக்கு வருவாய்த் துறையினர் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.
மேலும், 100  சதவிகித வாக்குப் பதிவு வலியறுத்தும் வகையில்  அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை தொழிலாளர்களிடம் விநியோகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் சந்திரன்  மற்றும் தேர்தல் பணியாளர்கள், பின்னலாடைத் தொழிலாளர்கள் என 300- க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT