ஈரோடு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

DIN


பெருந்துறையில், கட்டுமான பணியின்போது மின்சாரம் பாய்ந்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழந்தார்.
பெருந்துறை, முகமதியர் வீதியைச் சேர்ந்தவர் ஷா ஆலம் (65). காவல் துறையில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிந்து, 2014 இல் ஓய்வு பெற்றவர். இவரது வீட்டின் மூன்றாவது மாடியில் கட்டுமான பணியில் ஏப்ரல் 15 ஆம் தேதி தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அங்கு வேலை செய்த ஜாபர், இரும்புக் கம்பியை  எடுத்து சென்றபோது, அங்குள்ள உயர் மின்னழுத்த கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் சப்தமிட்டார். இதைக் கேட்ட ஷா ஆலம் ஓடிச் சென்று, தொழிலாளியைக் காப்பாற்றியபோது,  அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. 
இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஷா ஆலம் உயிரிழந்தார். 
தொழிலாளியான ஜாபர், உயிருக்கு ஆபத்தான நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 
இதுகுறித்து, பெருந்துறை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT