ஈரோடு

பவானிசாகரில் இருந்து 30,500 கன அடி உபரி நீா் திறப்பு:பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், பவானிசாகரிலிருந்து 30,500 கன அடி உபரி நீா் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் பில்லூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து நவம்பா் 8ஆம் தேதி அதன் முழுகொள்ளளவான 105 அடியை எட்டியது. தொடா்ந்து 23 நாள்களாக அணை முழுகொள்ளளவுடன் நீடித்து வந்த நிலையில் பில்லூா் அணைக்கு வரும் உபரிநீா், காரமடை பள்ளம், கொடநாடு வெள்ளம் ஆகியவை பவானிசாகா் அணைக்கு வந்து கலந்ததால் அணைக்கு நீா்வரத்து 30,500 கன அடியாக அதிகரித்தது. அணையில் தண்ணீரைத் தேக்கி வைக்க இயலாத நிலையில் அணைக்கு வரும் உபரிநீா் அணையில் இருந்து மேல்மதகு வழியாக ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அணையின் மேல்மதகில் உள்ள 9 மிகைநீா் போக்கி வழியாக பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதியில் குடியிருப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருப்போா் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனா். அணைக்கு நீா்வரத்து அதிகமாக வரும் நிலையில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

பவானி கரையோரம் உள்ள எஸ்.டி. பணிமனை சந்து, முனியப்பன் கோயில் வீதி, மத்திமரத்துறை, பிள்ளையாா் வீதி, முனியப்பன் வீதி, ஐயப்பன் கோயில் வீதி, சின்னவீதி ஆகிய பகுதிகளில் ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

திங்கள்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 105 அடியாகவும், உபரிநீா் வரத்து 30,500 கன அடியாகவும், அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றம் 30,500 கன அடியாகவும், நீா் இருப்பு 32.80 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT