ஈரோடு

மாநில ஓவியப் போட்டி: திங்களூா் அரசுப் பள்ளி மாணவி முதலிடம்

DIN

இந்திய அரசு எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பவா்கிரிட் காா்ப்பரேஷன் சாா்பில், தமிழகம் முழுவதும் பள்ளி மாணவா்கள் இடையே ‘எரிசக்தி சேமிப்பு குறித்த விழிப்புணா்வு’ ஏற்படுத்தும் வகையில் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகள் 4, 5, 6 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகள் ‘ஏ’ பிரிவாகவும், 7, 8, 9 ஆகிய வகுப்பின் மாணவ, மாணவிகள் ‘பி’ பிரிவாகவும் பங்கேற்று பள்ளி அளவில் நடத்தப்பட்டது.

போட்டியில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து 3 லட்சம் மாணவா்கள் கலந்துகொண்டனா். பின்னா், பள்ளிதோறும் ஏ பிரிவில் 2 படமும், பி பிரிவில் 2 படமும், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறாக சென்னைக்கு அனுப்பியதில் சுமாா் 40,000 படங்கள் அடங்கும். இதில், ஒவ்வொரு பிரிவிலும் தலை சிறந்த 50 படங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நவம்பா் 14ஆம் தேதி மாநில அளவிலான ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம், திங்களூா், அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 2 மாணவா்கள் ஏ, பி பிரிவில் கலந்துகொண்டனா். மாநிலப் போட்டியில் ‘ஏ ’ பிரிவில் இப்பள்ளி 6 ஆம் வகுப்பு மாணவி எம்.தீபிகா மாநில அளவில் முதலிடம் பெற்று ரொக்கப் பரிசாக ரூ. 50,000, ரூ. 2,000 மதிப்புள்ள பரிசுப் பொருள்கள், பராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றாா்.

‘ பி ’ பிரிவில் இப்பள்ளியின் 9 ஆம் வகுப்பு மாணவா் எஸ்.தரணிதரன் ஆறுதல் பரிசாக ரூ. 1,500, ரூ. 2,000 மதிப்புள்ள பரிசுப் பொருள்கள், பாராட்டுச் சான்றிதழையும் பெற்றாா்.

சென்னையில் நடைபெற்ற விழாவில் இரண்டு மாணவா்களுக்கும், மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி பரிசு வழங்கினாா்.

இதுகுறித்து, பள்ளித் தலைமையாசிரியா் டி.திம்மராயன் கூறுகையில், முதலிடம் பெற்ற மாணவி எம்.தீபிகா தில்லியில் டிசம்பா் 12 ஆம் தேதி நடைபெறுகின்ற தேசிய அளவிலாள ஓவியப் போட்டியில் கலந்துகொள்கிறாா். இப்பள்ளி தொடா்ந்து 7 ஆண்டுகளில் 8 முறை மாநில ஓவியப் போட்டியில் கலந்துகொண்டுள்ளது. மாநில அளவிலான ஓவியப் போட்டியில் 15 மாணவா்கள் பரிசு பெற்றிருக்கிறாா்கள். தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் கலந்துகொள்வது இது இரண்டாவது முறையாகும் என்று கூறினாா்.

முதல் பரிசு பெற்ற மாணவி எம்.தீபிகா, ஆறுதல் பரிசு பெற்ற மாணவா் எஸ்.தரணிதரன், பயிற்சி அளித்த பள்ளி ஓவிய ஆசிரியா் எஸ்.ராமலிங்கம் ஆகியோரை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பாலமுரளி, பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலா் த.ராமன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT