ஈரோடு

சுய உதவிக் குழுவில் ரூ.14.33 லட்சம் மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்

DIN


ஆப்பக்கூடல் சுய உதவிக் குழுவில் ரூ.14.33 லட்சம் மோசடி நடந்துள்ளதாக சங்க உறுப்பினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை புகார் அளித்தனர்.
 ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் பேரூராட்சியைச் சேர்ந்த அம்பேத்கர் ஆண்கள் சுய உதவிக் குழுவினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த புகார் மனு விவரம்:
 ஆப்பக்கூடல் பேரூராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி அடிப்படையில் துப்புரவுப் பணியாற்றி வருகிறோம். 
எங்களுடைய அம்பேத்கர் ஆண்கள் சுய உதவிக் குழுவில் 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரைசங்கத்தின் பெயரில் பல லட்சம் ரூபாய் மோசடியாகநடைபெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஆண்கள் சுய உதவிக் குழு மூலமாக ரூ. 14 லட்சத்து 33ஆயிரம் மோசடி செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் பிரபாகரன், சண்முகம் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். எங்களிடம் மோசடி செய்த பணத்தை எங்களுக்கு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்எனத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT