சென்னிமலை முருகன் கோயிலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
சென்னிமலை முருகன் கோயிலில் நடைபெறவுள்ள மகா தரிசனத்துக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக
சென்னிமலை முருகன் கோயிலில் நடைபெறவுள்ள மகா தரிசனத்துக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஜனவரி 25, 26 ஆகிய நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட தகவல்:
ஈரோடு அருகே உள்ள சென்னிமலை முருகன் கோயிலில் நடைபெறவுள்ள மகா தரிசனத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஜனவரி 25, 26 ஆகிய தேதிகளில் ஈரோடு, பெருந்துறை, கோபி ஆகிய ஊர்களிலிருந்து சென்னிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பேருந்துகளை சிறப்பாக இயக்குவதற்கு ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு இயக்க ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.