ஈரோடு

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம்: 300 பேருக்கு பணி நியமன ஆணை

DIN

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள் 302 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 
ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்புத் துறையின் சார்பில்  வேலைவாய்ப்பு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவை ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.
கல்லூரி முதல்வர் ரபீக் அகமது வரவேற்றார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி எஸ்.ஆறுமுகம், ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் பணி நியமன ஆணைக்கான உறுதிச் சான்றிதழ்களை வழங்கி பேசினார். 
விழாவில் 302 மாணவர்கள் தாங்கள் பணி நியமனம் பெற்ற நிறுவனங்களின் பணிநியமன ஆணையைப் பெற்றுக்கொண்டனர். நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT