ஈரோடு

வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

பெருந்துறை அருகே, வாய்க்காலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

DIN

பெருந்துறை அருகே, வாய்க்காலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 
ஈரோடு, மூலப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில் மகன் பிரதாப் (18). இவர், ஈரோடு, நஞ்சானபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு கணிதம் படித்து வந்தார். 
கல்லூரி முடிந்து நண்பர்களுடன் பெருந்துறை, ஈரோடு சாலையிலுள்ள கீழ்பவானி வாய்க்காலில் குளிப்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை சென்றார். அப்போது, நீரில் மூழ்கி காணமால் போனார். 
பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் இரவு முழுவதும் தேடியும் அவரை மீட்க முடியவில்லை. இந்நிலையில்,  சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு அருகே, அரவிளக்குமேட்டுபாளையம் என்ற இடத்தில் பிரதாப் உடல் புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. 
இதுகுறித்து, வெள்ளோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT