ஈரோடு

ஊராட்சி அலுவலகத்தில் கட்சியினர் மது அருந்தியதாக புகார்: ஒன்றிய அலுவலர் விசாரணை

DIN

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூர் ஊராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை இரவு ஊராட்சி பணியாளருடன் அரசியல் கட்சியினர் மது அருந்தியதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் அப்துல் வஹாப் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.
மே தினமான புதன்கிழமை செண்பகபுதூர் ஊராட்சி அலுவலகத்தில் சிலர் மது அருந்துவதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் அங்கு சென்றனர். அப்போது அலுவலக அறைக்குள் திமுக பிரமுகருடன் ஊராட்சி பணியாளர் மது அருந்தியது தெரியவந்தது. 
 இதனை இளைஞர்கள் விடியோ எடுத்து கட்செவி அஞ்சலிலில் வெளியிட்டனர். இந்தக் காட்சி வேகமாகப் பரவியது. இந்நிலையில், வியாழக்கிழமை கிராம மக்கள் 25-க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி ஊராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் வஹாப், விசாரணை நடத்தினார். இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

SCROLL FOR NEXT