ஈரோடு

பெருந்துறை ஒன்றியத்தில்ரூ. 30.50 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்

DIN

பெருந்துறை: பெருந்துறை ஒன்றியத்தில் ரூ. 30.50 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜை, முடிக்கப்பட்ட திட்டப் பணிகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமை வகித்து, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பாலன் நகரில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான பணியையும், சீலம்பட்டி காலனியில் ரூ. 13.50 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைப்பதற்கான பணியையும், பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட முதலியாா் வீதியில் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைப்பதற்கான பணியையும் துவக்கிவைத்தாா். மேலும், பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட ஓலப்பாளையத்தில் ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றைத் திறந்துவைத்தாா்.இதில், பேரூராட்சி செயல் அலுவலா்கள் கணேசன், கிருஷ்ணன், பெருந்துறை கூட்டுறவு வேளாண் விற்பனை சங்க துணைத் தலைவா் டி.டி.ஜெகதீஸ், மாவட்ட அதிமுக இலக்கிய அணித் தலைவா் அருள்ஜோதி செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT