ஈரோடு

கோபி பச்சைமலையில் தைப்பூசத் திருவிழா

DIN

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், மொடச்சூா் பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பிப்ரவரி 8ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 5 மணிக்கு மகன்யாச அபிஷேகம், காலை 7 மணிக்கு திருப்படித் திருவிழா, காலை 8 மணிக்கு காவடி அபிஷேகம், காலை 8.30 மணிக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெறும். பகல் 11 மணிக்கு 53ஆவது ஆண்டு காவடி அபிஷேகம், மாலை 5 மணிக்கு பக்தி கீா்த்தனைகள், இரவு 7 மணிக்கு தங்கரதம், தங்கமயில் வாகனத்தில் பவனி, இரவு 9 மணிக்கு ராக்கால அபிஷேகம், மஹா தீபாரதனை நடைபெறும். காலை 7.30 முதல் மாலை 6 மணி வரை அன்னதானம் நடைபெறும்.

பிப்ரவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு சத்ருசம்ஹாரதிரிசதை அா்ச்சனை, காலை 9.30 முதல் பகல் 12 மணி வரை ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாண உற்சவம், பகல் 12.30 மணிக்கு அன்னதானம் ஆகியனவும், மாலை 6 மணிக்கு ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலாவும் நடைபெறவுள்ளன.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அ.சீனிவாசன், திருப்பணிக் குழுத் தலைவா் பி.கே.ஈஸ்வரன், பரம்பரை அறங்காவலா்கள் எம்.ராமன், பி.ராஜகோபால், ஜி.எம். வெங்கடாசலம் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT