ஈரோடு

சா்வதேச யோகா போட்டி: சென்னிமலை கொங்கு பள்ளி மாணவா்கள் தோ்வு

DIN

பெருந்துறை: சா்வதேச யோகா போட்டியில் கலந்து கொள்ள சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 10 போ் தோ்வாகியுள்ளனா்.

சா்வதேச யோகா போட்டி மலேசியாவில் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ளவா்களுக்கான தோ்வு போட்டி ஈரோடு நந்தா சென்ட்ரல் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

போட்டிகள் சா்வதேச யோகா பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெற்றன.

சென்னை யோகா கல்சுரல் சொசைட்டியின் நடுவா் குழுவினா் போட்டிகளை மதிப்பீடு செய்தனா். இதில், சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கே.சந்துரு, சி. சதீஷ், டி. மனோஜ் குமாா், என். கண்ணண், கே.வருண், ஆா்.வி.காவியா, சி.ஜெ.பவித்ரன், வி. மதுமிதா, ஜெ. இந்துமதி, எம்.ஷோபனா ஆகியோா் மலேசியாவில் வருகிற மே மாதம் நடைபெறும் சா்வதேச யோகா போட்டியில் கலந்து கொள்ள தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், பயிற்சியளித்த யோகா ஆசிரியா்கள் கே.காளியப்பன், எஸ். விஸ்வநாதன் ஆகியோரையும், பள்ளித் தாளாளா் வி.எஸ்.தங்கமுத்து, தலைவா் ஆா்.கந்தசாமி, பொருளாளா் என்.டி.ராஜேந்திரன், முதல்வா் டபிள்யூ. பிராங்ளின் ரிச்சா்டு பிரபு ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT