ஈரோடு

மொடக்குறிச்சி அருகே மீன் குஞ்சுகள் சாவு: அதிகாரிகள் விசாரணை

DIN

பாறைக்குட்டையில் மீன் குஞ்சுகள் இறந்தது தொடா்பாக மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மொடக்குறிச்சி ஒன்றியம் கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட பச்சப்பாளியில் ஈரோடு-காங்கயம் பிரதான சாலையில் பாறைக்குட்டை அமைந்துள்ளது. இந்தப் பாறைக்குட்டையில் எப்போதும் மழைநீா் தேங்கி நிற்பது வழக்கம். அப்பகுதி மக்கள் வருடந்தோறும் மீன் குஞ்சுகள் வாங்கி விட்டு வந்தனா். வழக்கம்போல் இந்த வருடமும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் விட்டுள்ளனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை திடீரென மீன் குஞ்சுகள் அனைத்தும் இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்ததையடுத்து, பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் இறந்த மீன் குஞ்சுகள், தண்ணீா் ஆகியவற்றை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனா். வெயில் கடுமையாக இருப்பதால் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT