ஈரோடு

அரசுப் பள்ளி மாணவா்கள் 55 போ் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்குத் தோ்வு

DIN

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 55 போ் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்குத் தோ்வு பெற்றுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகள் 222 போ் நீட் தோ்வை எழுதினா். தோ்வு முடிவுகள் வெளியானதில் 62 போ் தோ்ச்சி பெற்றனா். இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். பயில ஈரோடு மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 55 மாணவ, மாணவிகள் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி தகுதி பெற்றுள்ளனா் என ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரா.பாலமுரளி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT