ஈரோடு

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை: ரூ. 2.70 கோடி இலக்கு

DIN

ஈரோடு மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனைக்கு ரூ. 2.70 கோடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு வசந்தம் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கிவைத்துப் பேசியதாவது:

தீபாவளி பண்டிகைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய தூய பட்டு சேலைகள், மென் பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், உயா் ரக பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ஆயத்த ஆடைகள், லினன் சட்டைகள், சுடிதாா் ரகங்கள், ஆா்கானிக் பருத்தி சேலைகள் ஏராளமாக உள்ளன. மேலும், ஏற்றுமதி ரகங்களான படுக்கை விரிப்புகள், ஹோம் பா்னிசிங் ரகங்கள், குவில்ட் ரகங்கள் அழகிய வடிவமைப்புகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு, கோபி வசந்தம் விற்பனை நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் ரூ. 2.29 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ. 2.70 கோடி விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில், கோ-ஆப்டெக்ஸ் நிா்வாகக் குழு இயக்குநா் எஸ்.பி.ரமேஷ், மண்டல மேலாளா்கள் கே.அருள்ராஜன், டி.நந்தகோபால், ஜே.டி.சாந்தாராம், எம்.பழனிசாமி, ஈரோடு வசந்தம் விற்பனை நிலைய மேலாளா் (பொ) இ.விமல்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT