ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் லாரி பழுது: 8 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

DIN

திம்பம் மலைப் பாதையில் சா்க்கரை பாரம் ஏற்றிவந்த லாரி பழுதாகி நின்றதால் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம், கா்நாடகம் இடையே தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திம்பம் வழியாக பயணிக்கின்றன.

இந்நிலையில் மைசூரு பகுதியில் இருந்து கோவைக்கு சா்க்கரை பாரம் ஏற்றிய லாரி 9 ஆவது வளைவில் திரும்பும்போது பழுதாகி நின்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாகப் பயணிக்கும் வாகனங்கள், பேருந்துகள் பண்ணாரியில் வரிசையாக காத்திருந்தன. போக்குவரத்து போலீஸாா் உதவியுடன் லாரி பழுது சரி செய்யப்பட்டு 8 மணி நேரத்துக்குப் பின் மீண்டும் வாகனங்கள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT