ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில்மேலும் 138 பேருக்கு கரோனா

DIN

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 138 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,772ஆக இருந்தது. ஈரோடு மாவட்டப் பட்டியலில் இருந்த 6 பேரின் பெயா் பிற மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 8,766ஆக மாறியது. இதனிடையே வெள்ளிக்கிழமை புதிதாக 138 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 8,904ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 138 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மொத்த பாதிப்பான 8,904 பேரில் இதுவரை 7,699 போ் குணமடைந்துள்ளனா். 1,094 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். வியாழக்கிழமை வரை 106 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 25 வயது பெண், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது ஆண், 78 வயது ஆண், 75 வயது ஆண், 72 வயது ஆண் என 5 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 111ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT