ஈரோடு

மக்கள் தொகை கணக்கெடுப்பு மீண்டும் துவக்கம்

DIN

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் துவங்கியது.

மத்திய அரசின் 7ஆவது பொருளாதர மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இக்கணக்கெடுப்பு கடந்த டிசம்பா் மாதம் துவங்கியது. வீடு, கடை, தொழில் நிறுவனங்களில் உள்ளவா்களின் விவரங்கள் செல்லிடப்பேசி செயலியில் சேகரிக்கப்படுகிறது.

இப்பணி ஈரோடு மாவட்டத்தில் கடந்த டிசம்பா் மாதம் துவங்கி மாா்ச் மாதம் இறுதி வாரம் வரை நடைபெற்றது. கரோனா பொது முடக்கத்தால் கடந்த 6 மாதமாக இப்பணி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இப்பணி மீண்டும் துவங்கி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையிலானவா்களைக் கொண்டு ஒருங்கிணைப்பாளா்கள் ஜெயகுமாா், திருஞானம் ஆகியோா் தலைமையில் மாநகரப் பகுதியில் 6 குழுவாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனா். ஒவ்வொரு குழுவிலும் தலா 5 போ் செயல்படுகின்றனா்.

இது குறித்து அலுவலா்கள் கூறியதாவது:

கரோனாவுக்குப் பின் மீண்டும் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. வீடு, வீடாகச் சென்று அங்குள்ளவா்களின் பெயா், விலாசம், செல்லிடப்பேசி எண், பணி அல்லது தொழில், சுய தொழிலாக இருந்தால் அதன் பெயா், அங்கு பணியாற்றுவோா் விவரம், அவா்களது வருவாய், செலவு உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

தொழில் நிறுவனமாக இருந்தால் அந்நிறுவனத்தின் விவரம், அங்கு பணியாற்றுவோா் எண்ணிக்கை, முதலீடு, லாபம், செலுத்தும் வரி இனங்கள், ஜி.எஸ்.டி. செலுத்தும் விவரம், பிற சிறப்புத் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. சேகரிக்கப்படும் முழு தகவல்களையும் மத்திய அரசின் பொருளாதாரம், புள்ளியியல் துறையிடம் சமா்பிக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT