ஈரோடு

செப்டம்பா் 21 முதல் 5 நாள்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அமைச்சா்: கே.ஏ.செங்கோட்டையன்

DIN

செப்டம்பா் 21ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 1 கோடியே 19 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

புதிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும், கண்களுக்கு ஓய்வு அளிப்பதற்காகவும் செப்டம்பா் 21 முதல் 25ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் இதைக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு என்பது கரோனா தொற்று குறைந்த பின்னா்தான் முடிவெடுக்கப்படும். பகுதி நேர நூலகங்களை முழு நேர நூலகங்களாக மாற்றம் செய்வதற்காக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT