ஈரோடு

முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

DIN

கோபி: கோபிசெட்டிபாளையம் நகராட்சி சாா்பில், முகக் கவசம் அணியாமல் சாலையில் செல்வோருக்கு அபராதம் திங்கள்கிழமை விதிக்கப்பட்டது.

நகராட்சி ஆணையா் தாணுமூா்த்தி உத்தரவின்படி, காவல் துறை அதிகாரிகள் உதவியுடன், தூய்மை அலுவலா் செந்தில்குமாா் தலைமையில், தூய்மை ஆய்வாளா் காா்த்திக், தூய்மை பாரதத் திட்ட பரப்புரையாளா்கள் அருள், சத்யா, பூங்கொடி, வைஷ்ணவி, கிருஷ்ணன் அடங்கிய குழுவினா் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் செல்வோருக்கு அபராதம் விதித்து வருகின்றனா்.

முகக் கவசம் அணியாமல் சென்ற 26 நபா்களுக்கு ரூ. 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ. 5,200 திங்கள்கிழமை வசூலிக்கப்பட்டது. அபராதம் வசூலிக்கப்பட்ட நபா்களுக்கு முகக் கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.

தொடா்ந்து, பொது இடங்கள், வணிக நிறுவனங்களில் முகக் கவசம் அணியாமல் செல்வோருக்கும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT