ஈரோடு

பிணையம் இல்லாமல் கூடுதல் கடன்: சிறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

DIN

 ரூ. 10 கோடி வரை பிணையம் இல்லாமல் கூடுதல் கடன் பெற வாய்ப்புள்ளதால் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிகளை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு கரோனா தாக்குதல் மற்றும் முடக்க நிலையில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி, இதர செயல்பாடுகளை மீட்டெடுக்க சொத்து பிணையம் இல்லாமல் அவசர கால கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே வங்கியில் பெற்ற கடனில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் உள்ள நிலுவைத் தொகையில் 20 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 10 கோடி வரை கூடுதல் சொத்துப் பிணையம் இன்றி அவசர கால கடனாகப் பெறலாம்.

இக்கடன் மூலம் அந்நிறுவனம் உற்பத்தியைத் துவங்குதல், மேம்படுத்துதல், நடைமுறை மூலதனமாகப் பயன்படுத்துதல், புதிய இயந்திரங்கள் நிறுவுதல் போன்ற பணிகளைச் செய்ய இயலும். இத்திட்டம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் வங்கி கடன் பெற்றவா்கள், முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம் மூலம் இக்கடன் பெறலாம். ஜூலை 17ஆம் தேதி ஈரோட்டுக்கு முதல்வா் எடப்பாடி பழனிசாமி வந்தபோது 8,329 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 350 கோடி கடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இக்கடன் இலக்கு ரூ. 500 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆகஸ்ட் மாதம் வரை 11,999 நிறுவனங்கள் ரூ. 525 கோடி கடன் பெற்று, ரூ. 404.63 கோடி பயன்படுத்தியுள்ளனா். கடன் இலக்கை விஞ்சிய நிலையிலும் அக்டோபா் 31ஆம் தேதி வரை கடன் பெற வாய்ப்புள்ளதால், எஞ்சிய நிறுவனங்கள் இந்த கடன் பெற வங்கிகளை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT