ஈரோடு

மல்லிகை கிலோ ரூ.70க்கு விற்பனை:விவசாயிகள் கவலை

DIN

மல்லிகைப்பூ கிலோ ரூ.245க்கு விற்பனையாகி வந்த நிலையில், முழு பொதுமுடக்கத்தால் வாசனை திரவிய ஆலைகளுக்கு கிலோ ரூ.70க்கு விற்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மல்லிகை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் மல்லிகைப்பூக்கள் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, திருப்பூா், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கா்நாடகா, மும்பை, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

இந்த நிலையில் முழு பொதுமுடக்கம் காரணமாக சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் பறிக்கப்பட்ட 10 டன் மல்லிகை பூக்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தன.

சனிக்கிழமை மல்லிகை பூ கிலோ ரூ.245க்கு விற்பனையான நிலையில் முழு ஊரடங்கு காரணமாக பூக்களை வாங்க ஆள் இல்லாததால் கோவை மாவட்டம் காரமடை, மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சோ்ந்த வாசனை திரவிய தொழிற்சாலைகளுக்கு கிலோ ரூ.70க்கு விற்பனை செய்ய வேண்டிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனா்.

ஒரு கிலோ மல்லிகைப் பூ பறிப்பதற்கு ரூ.60 முதல் ரூ.75வரை செலவாகும் நிலையில் பூப் பறிக்கும் கூலிக்கு கூட கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளதால் சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகைப் பயிரிட்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT