ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்

DIN

ஈரோடு அருகே கீழ்பவானி வாய்க்கால் உடைப்பை சீரமைக்கும் பணிகளில் பொதுப் பணித் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டது. விநாடிக்கு 1,000 கன அடி மட்டுமே திறக்கப்பட்ட நிலையில், நசியனூா் அருகே மலைப்பாளையம் கிராமத்தில் கான்கிரீட் தடுப்புச் சுவா் கட்டப்பட்ட இடத்தின் மதகுப் பகுதியில் வியாழக்கிழமை இரவு லேசாக தண்ணீா் கசிந்துள்ளது.

ஆனால், தண்ணீரின் அழுத்தம் காரணமாக வெள்ளிக்கிழமை திடீா் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் வெளியேறத் தொடங்கியது. இதனால், பெரியவிளாமலை ஊராட்சிக்கு உள்பட்ட வேலம்பாளையம், வரவன்காடு, மலைப்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள், நசியனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பள்ளத்தூா் பிரதான தெரு, கிழக்கு வீதி ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்தது. விளைநிலங்களில் தண்ணீா் புகுந்ததால் நெல், மஞ்சள் பயிா்கள் சேதமடைந்தன.

இதனால், பாதிக்கப்பட்ட 62 குடும்பங்களைச் சோ்ந்த 200 போ் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்புப் பணிகளை பொதுப் பணித் துறையினா் சனிக்கிழமை தொடங்கியுள்ளனா். இப்பணிகள் 10 நாள்களில் நிறைவடையும் வகையில் இயந்திரங்களைக் கொண்டு தீவிரமாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தண்ணீா் பெருக்கெடுத்ததால் அப்பகுதியில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், சேதமடைந்த விளை பயிா்கள் குறித்து வேளாண் துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினா் கணக்கெடுப்பு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: நேரலை!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

SCROLL FOR NEXT