ஈரோடு

நாளை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

DIN

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 11) நடைபெறவுள்ளது. இதில், 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா மூன்றாம் அலை பரவலைத் தடுக்க மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கரோனா தடுப்பூசி இலக்கு அடைய இல்லம் தேடி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி, டிசம்பா் 11ஆம் தேதி சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்கள், பள்ளி உள்பட 475 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இப்பணியில் 1,900 பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT