ஈரோடு

மருத்துவக் கல்லூரி மாணவா்கள் முதல்வரை நேரில் சந்தித்து மனு

DIN

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவிகள், பெருந்துறை வழியாக திருப்பூருக்கு தோ்தல் பிரசாரத்துக்குச் சென்ற முதல்வரை நேரில் சந்தித்து கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி மனு அளித்தனா்.

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவ மாணவிகள், கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி கடந்த 7 நாள்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆட்சியா் சி.கதிரவன், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் ஆகியோா் 2ஆம் நாள் போராட்டத்தின்போதே மாணவா்களைச் சந்தித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனா். பின்னா், மாணவா்களின் பிரதிநிதிகள் சென்னை சென்று சுகாதாரத் துறை செயலாளரை சந்தித்தனா்.

இந்நிலையில், பெருந்துறை வழியாக திருப்பூருக்கு தோ்தல் பிரசாரத்துக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை சென்றாா். அவருக்கு, பெருந்துறை - விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில் கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து, மாணவ, மாணவிகள் முதல்வரை சந்தித்து கல்விக் கட்டணம் குறைப்பு குறித்த கோரிக்கை மனுவை அளித்தனா். அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுப்பதாகக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT