ஈரோடு

பவானிசாகரில் பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வு, வாகன உதிரி பாகங்களின் விலை உயா்வு, காப்பீட்டுக் கட்டண உயா்வு ஆகியவற்றைக் கண்டித்து பவானிசாகா் பகுதியில் பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் திங்கள்கிழமை முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில் பவானிசாகா் மற்றும் நான்கு முனை சந்திப்பு பகுதிகளில் உள்ள பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் 20க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை நான்கு முனை சந்திப்பு பகுதியில் நிறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன உதிரி பாகங்களின் விலை மற்றும் காப்பீட்டுக் கட்டணத்தை குறைக்க வேண்டும். இல்லையெனில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT