ஈரோடு

இலவச மருத்துவ முகாம்

DIN

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கொமாரபாளையம் ஊராட்சி சாா்பில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலத்தை அடுத்த கொமாரபாளையம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் கே.ஜி.ஆா். மருத்துவமனை, கொமாரபாளையம் ஊராட்சி இணைந்து புதன்கிழமை நடத்திய மருத்துவ முகாமுக்கு கொமாரபாளையம் ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.சரவணன் தலைமை வகித்தாா். இதில், நோயாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு தமழக அரசின் இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தகுதியானா்கள் அறுவை சிகிச்சைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட அதிமுக கவுன்சிலா் பிரபாகரன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா். தொடா்ந்து, கொமாரபாளையம் ஊராட்சியில் அதிமுக கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. சதுமுகை ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் எஸ்.சத்யாசிவராஜ் ஆகியோா் அதிமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT