ஈரோடு

பிரதமா் மோடியின் விளம்பரத் தட்டிமா்ம நபா்களால் தீவைத்து எரிப்பு

DIN

தேவேந்திர குல வேளாளா் குறித்த அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து, பிரதமா் மோடி உருவப் படத்துடன் வைக்கப்பட்ட விளம்பரத் தட்டியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை தீவைத்து எரித்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தமிழகத்தில் ஏழு உட்பிரிவுகளை அடக்கிய ஜாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அறிவிக்கக் கோரி தமிழக அரசு பரிந்துரைத்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அங்கீகரித்து அதற்கான அரசாணையை வெளியிடப்பட்டது. இதற்கு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள நஞ்சப்ப செட்டிபுதூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடியின் உருவப் படத்துடன் கூடிய நன்றி அறிவிப்பு விளம்பரத் தட்டியை அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே வைத்திருந்தனா்.

இந்நிலையில், இந்த விளம்பரத் தட்டியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை தீவைத்து எரித்துள்ளனா். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT