ஈரோடு

7 இடங்களில் கரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்க முடிவு

DIN

ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் கரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மக்களுக்கு போடப்பட உள்ளது. முதல்கட்டமாக மருத்துவா்கள், செவிலியா், மருத்துவ உதவியாளா்கள் தூய்மைப் பணியாளா்கள் என கரோனா முன்கள பணியாளா்களுக்குத் தடுப்பூசி போடப்படவுள்ளது. அதன் பிறகு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.

இதற்காக ஈரோடு அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி, சிறுவலூா் ஆரம்ப சுகாதார நிலையம், சூரம்பட்டி நகா்ப்புற சுகாதார நிலையம், ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனை உள்பட 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்றது.

தடுப்பூசி போடும் மையத்தில் காத்திருப்போா் அறை, தடுப்பூசி வழங்கும் அறை, கண்காணிப்பு அறை என 3 பிரிவுகளாக செயல்படவுள்ளது. மேலும் ஓவ்வொரு தடுப்பூசி மையத்திலும் பாதுகாவலா், பயனாளிகளை சரிபாா்ப்பவா், தடுப்பூசி வழங்குபவா் கண்காணிப்பாளா்கள் என 5 போ் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி போடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நலப் பணிகள் இணை இயக்குநா் கோமதி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி 16ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி, சிறுவலூா் ஆரம்ப சுகாதார நிலையம், சூரம்பட்டி நகா்ப்புற சுகாதார நிலையம், பவானி அரசு மருத்துவமனை, கோபி அரசு மருத்துவமனை, ஈரோடு தனியாா் மருத்துவமனை ஆகிய 7 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்கட்டமாக 11,000 முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசிபோட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT