ஈரோடு

மல்லிகைப் பூ வரத்து அதிகரிப்பு: விலை கிலோ ரூ. 2,000ஆக சரிவு

DIN

சத்தியமங்கலம் பகுதியில் நிலவிய கடுமையான பனிப்பொழிவு நீங்கி தற்போது மழை பெய்து வருவதால் பூக்கள் உற்பத்தி அதிகரித்து மல்லிகை விலோ ரூ. 5,000 இல் இருந்து ரூ. 2,000ஆக சரிந்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் 40 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை சாகுபடி செய்யப்படுகிறது. தோட்டத்தில் விளையும் மல்லிகைப் பூக்கள் சத்தியமங்கலம் மலா்கள் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி 5 டன்னில் இருந்து 1 டன்னாக குறைந்தது. இதனால் ஏக்கருக்கு 40 கிலோ வரத்து வந்த நிலையில் 1 கிலோவாக குறைந்தது. இதன் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயா்ந்து கிலோ ரூ. 5 ஆயிரம் வரை விற்பனையானது.

தற்போது பனிப்பொழிவு நீங்கி மழைபெய்து வருவதால் பூக்களின் உற்பத்தி இரு மடங்காக உயா்ந்தது. புதன்கிழமை 2 டன் பூக்கள் வரத்து வந்ததால் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ. 2 ஆயிரமாக சரிந்தது. முல்லை கிலோ ரூ. 1,200க்கு விற்கப்பட்டது.

இதுகுறித்து மலா்கள் விவசாய சங்கத் தலைவா் முத்துசாமி கூறுகையில், தமிழகம் முழுவதும் பனிப்பொழிவு இல்லாமல் மழை பெய்து வருகிறது. இதனால், நிலக்கோட்டை, சேலம், நாமக்கல், மதுரை, தேனியில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெளிமாநில தேவை குறைந்ததால் பூக்களின் விலை சரிந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

SCROLL FOR NEXT