ஈரோடு

சத்தியமங்கலத்தில் மினி மாா்க்கெட் திறப்பு:நோய் பரவும் அபாயம்

DIN

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் காரணமாக திங்கள்கிழமை தனிக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மினி மாா்க்கெட்டும் திறக்கப்பட்டதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் காய்கறி, மளிகைக் கடைகள் மூடப்பட்டன. தற்போது தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் காய்கறி, மளிகைக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சத்தியமங்கலத்தில் ஆங்காங்கே மினி மாா்க்கெட் செயல்படத் துவங்கியது. கோட்டுவீராம்பாளையத்தில் சாலையோர மினி மாா்க்கெட் காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. அங்கு தனிமனித இடைவெளியின்றி விற்பனை நடைபெற்றது. தனி மளிகைக் கடைகள் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற விதியை மீறி மினி மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதனால், நோய்ப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT