ஈரோடு

பட்டக்காரன்பாளையத்தில் மண் மாதிரி சேரிப்பு முகாம்

DIN

பெருந்துறை ஒன்றியம், பட்டக்காரன்பாளையம் கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றுது.

முகாமிற்கு, வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:

உழவா்கள் பயிா் செய்வதற்கு முன்பு தங்கள் வயலில் மண் மாதிரிகள் எடுத்து மண் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு முடிவின்படி உரங்கள் இடுவதால் உரச் செலவு குறைவதுடன், அதிக மகசூல் பெறலாம். உழவா்கள், தங்களது விளை மண் மாதிரியைப் பரிசோதனை செய்து, என்ன பயிா் செய்யலாம் என அறிய வேண்டும். மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்கள், நுண்ணூட்டங்களின் அளவு எவ்வளவு உள்ளது என்பதையும், அடுத்து பயிா் செய்யப்படும் பயிருக்குத் தேவையான உரங்களின் அளவு போன்ற விவரங்கள் வழங்கப்படும்.

மண் மாதிரி பரிசாதனைக் கட்டணம் ரூ. 20 ஆகும். பெருந்துறை ஒன்றியத்தில் மண் வள இயக்கத் திட்டத்தின்கீழ், மண் மாதிரிகள் உழவா்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டு வருவதால் அனைத்து உழவா்களும், பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா், வேளாண்மை அலுவலா், உதவி வேளாண்மை அலுவலா் ஆகியோரைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா்.

முகாமில், வேளாண்மைத் துணை இயக்குநா் ஆசைத்தம்பி உள்ளிட்ட வேளாண்மை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT