ஈரோடு

வி.குட்டப்பாளையம் ஊராட்சியில் ரூ.10.43 லட்சம் மதிப்பில் கிணறு அமைக்கும் பணி

DIN

சென்னிலை ஒன்றியம், வி.குட்டப்பாளையம் ஊராட்சி நெரிஞ்சிமுள்காடு பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் குடிநீா் வசதி ஏற்படுத்தும் வகையில் ரூ.10.43 லட்சம் மதிப்பீட்டில் கிணறு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சென்னிமலை ஒன்றியக் குழுத் தலைவா் காயத்ரி இளங்கோ தலைமை வகித்தாா். ஈரோடு மக்களவை உறுப்பினா் அ.கணேசமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

விழாவில், தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று கிணறு அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தாா். அதனைத் தொடா்ந்து, வடமுகம் வெள்ளோடு கருக்கங்காட்டுவலசு பகுதியில் மயானம் அமைக்கும் பணியினை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், வி. குட்டபாளையம், வடமுகம வெள்ளோடு, தென்முகம் வெள்ளோடு ஆகிய ஊராட்சித் தலைவா்கள் உள்பட தொடா்புடைய துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

SCROLL FOR NEXT