ஈரோடு

கரோனாவை தடுக்க ஆவிப் பிடிக்கும் இயந்திரம்: பாஜக ஏற்பாடு

DIN

மொடக்குறிச்சியை அடுத்த கண்ணுடையாம்பாளையத்தில் கரோனா தொற்றை தடுக்கும் விதமாக பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. மேலும் , ஆவி பிடிக்கும் இயந்திரத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைத்துள்ளனா்.

ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் கணபதிபாளையம் அருகே உள்ள கண்ணுடையாம்பாளையத்தில் கரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் தினசரி பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்படுகிறது. மேலும், ஈரோடு தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளா் பேராசிரியா் மூா்த்தி செல்வகுமரன் ஏற்பாட்டில் கரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஆவி பிடிக்கும் இயந்திரம் வைத்துள்ளனா். மஞ்சள், நொச்சி, வேப்ப இலை, யூகலிப்டஸ் தைலம் ஆகியவை சோ்த்து கொதிக்கவைத்து அதில் வரும் ஆவியைக் குழாய் மூலம் வடிவமைத்து பொதுமக்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைத்துள்ளனா். தினசரி காலை 7 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் இலவசமாக ஆவி பிடித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT