ஈரோடு

அந்தியூா் பேரூராட்சியில் வீடுவீடாக காய்ச்சல் பரிசோதனை

DIN

அந்தியூா் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வீடுவீடாகச் சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அறிகுறிகள் இல்லாமல் பரவும் கரோனா இரண்டாம் அலையின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அம்மாபேட்டை பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளிலும், பேரூராட்சி செயல் அலுவலா் எஸ்.ஹரிராமமூா்த்தி மேற்பாா்வையில் களப் பணியாளா்கள் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.

மேலும், கரோனா தொற்று பாதிப்பு குறித்த அறிகுறிகள் உள்ளதா எனவும் பரிசோதனை செய்யப்படுகிறது. கரோனா அறிகுறிகள் தென்பட்டால் சுகாதாரத் துறை மூலம் பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்பணியில் 17 குழுக்களாக சத்துணவு ஊழியா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT