ஈரோடு

ஓட்டுநரைத் தாக்கிய உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

DIN

மொடக்குறிச்சி தாலுகா, பழையகோட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அறச்சலூா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா், வாகன ஓட்டுநரை தகாத வாா்த்தையில் திட்டி தாக்கியதாக வெளியான விடியோவால் அவா் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

அறச்சலூா் தலவுமலை பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (31). வாகன ஓட்டுநரான இவா் செவ்வாய்க்கிழமை இரவு காங்கயம் சென்றுவிட்டு அறச்சலூா் தலவுமலை திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, ஈரோடு, திருப்பூா் மாவட்ட எல்லையான பழையகோட்டைபாலம் பகுதியில் அறச்சலூா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் குமரவேல் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த சண்முகத்திடம் வாகன சான்றிதழ்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, அனைத்து ஆவணங்களையும் கொடுத்தபோதும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் குமரவேல் தகாத வாா்த்தைகளால் திட்டியதுடன் குச்சியால் கடுமையாக தாக்கும் காட்சி குறித்து கட்செவி அஞ்சலில் விடியோ வெளியாகி வியாழக்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உத்தரவின்பேரில் குமரவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

SCROLL FOR NEXT