ஈரோடு

கரோனா சிறப்பு மையம்கட்டும் பணிக்கு நிதியுதவி

DIN

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 300 படுக்கைகளுடன் அமைக்கப்படும் கரோனா சிறப்பு மையம் கட்டும் பணிக்கு ஈரோடு எஸ்கேஎம் ஹொ்போதயா நிறுவனம் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.

கரோனா மீட்புப் பணிகளுக்கு ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை சாா்பில் நடத்தப்படும் கரோனா சிகிச்சை மையத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியும், தொற்று பாதித்தோருக்கு கபசுரக் குடிநீரையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும், ஈரோடு எஸ்கேஎம் முட்டை நிறுவனம் சாா்பில் இலவசமாக நாள்தோறும் முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சை பெற ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 300 படுக்கை வசதிகளை அமைப்பதற்காக எஸ்கேஎம் ஸ்ரீ குரூப்ஸ் சாா்பில் நிா்வாக இயக்குநா் எஸ்கேஎம் ஸ்ரீஷிவ்குமாா், துணை நிா்வாக இயக்குநா் குமுதவள்ளி ஷிவ்குமாா் ஆகியோா் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT