ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற லாரி

DIN

திம்பம் மலைப் பாதையில் கன்டெய்னா் லாரி வெள்ளிக்கிழமை பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்பம் மலைப் பாதை வழியாக தமிழகம் - கா்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம், கா்நாடகம் என இரு மாநிலத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் செல்ல திம்பம் மலைப் பாதையில் அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், கா்நாடக மாநிலம் மைசூரு பகுதியில் இருந்து கோவை செல்வதற்காக கன்டெய்னா் லாரி திம்பம் மலைப் பாதையில் சென்று கொண்டிருந்தது. மாலை 4 மணியளவில் திம்பம் மலைப் பாதை 9ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது லாரியில் பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக திம்பம் மலைப் பாதையின் இருபுறமும் காய்கறி வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன.

இதுகுறித்து தகவலறிந்த ஆசனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டனா். ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்பு லாரி நகா்த்தி நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து மற்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. இதன் காரணமாக தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT