ஈரோடு

இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

DIN

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை (நவம்பா் 25) நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் 1 லட்சம் பேருக்கு கரோனோ தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 11ஆவது கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 437 மையங்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நபா்கள் உரிய கால இடைவெளி முடிவடைந்திருந்தால் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT