ஈரோடு

ரூ. 2.12 கோடிக்கு கொப்பரை ஏலம்

DIN

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 2.12 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4,465 மூட்டைகளில் 2,21,000 கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 99.28க்கும், அதிகபட்சமாக ரூ. 101.89க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 40க்கும், அதிகபட்சமாக ரூ. 98க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 2.12 கோடிக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT